நெடுந்தீவுக்கு மேலதிக பொலிசார் வரவழைக்கப்பட்டு இன்றையதினம் தேடுதலில்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவில் நேற்று முன்தினம் (ஜூன்20) அதிகாலையில் கொலை செய்யப்பட்ட நெடுந்தீவு 06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அன்ரன் ஜீவராஜ் அமல்ராஜ் (அமல்-வயது 22) என்ற இளைஞனின் கொலையுடன் சம்பத்தப்பட்ட 03 சந்தேக நபர்களையும் தேடும் நடவடிக்கைக்காக மேலதிக பொலிசார் இன்றையதினம் (ஜூன்22) நெடுந்தீவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு பகுதி இளைஞர்களும் பொலிசாருடன் இணைந்து இத் தேடுதல் நடவடிக்கையில் இன்று காலைமுதல் ஈடுபட்டபோதும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தேடுதலில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ தினத்தில் இருந்து இன்று வரைக்கும் தேடுதல் தொடரும் நிலையில் கொலை  சம்பவத்துடன் 04 சந்தேக நபர்கள்  தொடர்புபட்டிருந்த நிலையில் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன் ஏனைய மூவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர்க்ளை  கைது செய்யக்கோரி நேற்றையதினம் மாலை உயிரிழந்தவரின் சடலத்துடன் பொலிஸ் நிலையம் முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது

 

 

Share this Article