அருட்கலாநிதி இராஜப்பு ஜோசப் ஆண்டகையின் ஞாபகார்த்தமாக BISHOP CUP – 2024 கிறிகெட் தொடர் – நெடுந்தீவில்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
Screenshot

நெடுந்தீவு மண்ணின் பெருமைமிகு சான்றோனாக புகழப்படும்   மறைந்த மன்னார் மறை மாவட்ட   ஆயர் அருட்கலாநிதி இராஜப்புஜோசப் ஆண்டகையின் ஞாபகார்த்தமாக “BISHOP CUP – 2024“     மென்பந்து கிறிகெட் தொடரினை நடாத்த நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவை  ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

மென்பந்து கிறிகெட் தொடரினை எதிர்வரும் ஜூலை மாதம் 4,5,6 மற்றும் 7ஆம் திகதிகளில் நடாத்துகின்ற வகையில் ஏற்பாட்டு குழுவினரோடு சந்திப்பினை நேற்றையதினம் (ஜூன்16) நெடுந்தீவு பங்குப்பணிமனையில்  நெடுந்தீவு பங்குத்தந்தை மேற்கொண்டிருந்தார்.

தொடரில் பங்குகொள்ள விரும்பும் வீரர்களின் பெயர் விபரங்கள்  விளையாட்டுகழகங்களூடாக பெற்றுக்கொள்ளப்பட்டு அனைத்து கழகங்களையும் பிரதிநிதித்துவம் செய்து அணிகள் எதிர்வரும் வாரமளவில் உருவாக்கப்படவுள்ளதுடன் குறித்த தொடரினை ஒவ்வொரு வருடமும் முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article