நெடுவூர்த்திருவிழாவில் நூல் வெளியீடுகளுக்கான சந்தர்ப்பம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
Screenshot

நெடுந்தீவின் எழுத்தாளர்கள்  தங்களது நூல்களை நெடுவூர்த்திருவிழாவில் வெளியீடு செய்ய விரும்பினால் 2024ஜூன்20 இற்கு முன்னர் நெடுந்தீவு ஊரும்உறவும் நிறுவன அலுவலகத்தில் பதிவினை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊர்சார் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட கவிதை, சிறுகதை, நாவல், என்பவற்றை நெடுவூர்த் திருவிழாவில் வெளியீடு செய்வதற்கு வாய்ப்புக்கள்வழங்கப்பட்டுள்ளதுடன் ஊர்சார்ந்த ஆவணப்படுத்தல் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் நோக்கில்இவ்வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

நெடுந்தீவை நிலையான அபிவிருத்தி செய்யும் நோக்கில் நெடுந்தீவு ஊரும்உறவும் நிறுவனத்தினால் “மீண்டும் ஊருக்குப் போகலாம்” எனும் தொனிப்பொருளில் உலகம் முழுவதும் பரந்து வாழும்  ஊரின் உறவுகளைஒன்றிணைத்து 04.08.2024 தொடக்கம் 10.08.2024 வரை “நெடுவூர்த்திருவிழா” நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article