நெடுவூர்த் திருவிழாவில் விளையாட்டு நிகழ்வுகளுக்கான பதிவுகளை மேற்கொள்ளல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

“நெடுவூர்த் திருவிழா” வின் போது இடம்பெறவுள்ள விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளோர் விபரங்கள் சேகரிக்கப்படவுள்ளது.

ஒரே ஊர் சார்ந்த மக்கள் என்கின்ற வகையில் இலங்கையின் பலமாவட்டங்களைச் சேர்ந்தோரும் சர்வதேச நாடுகளிலிருந்தும் வருகைதருபவர்களும் விளையாட்டுக்களில் பங்கெடுப்பதன் ஊடாக மீண்டும்உறவுப்பாலத்தை கட்டியெழுப்பும் வகையில் பல்வகை விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் நடைபெறவிருக்கும் விளையாட்டுகளின் விபரம் கூகுள்விண்ணப்பத்தில் தரப்பட்டுள்ளது.

பங்குபற்ற விரும்பும் விளையாட்டு விபரங்களை  விண்ணப்பத்தில் பூர்த்திசெய்யுமாறு ஊரும் உறவும் நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.

https://forms.gle/BXvBvz5ttuABLe1k8

இதேவேளை விளையாட்டு நிகழ்வுகள் தொடர்பிலான நடைமுறைகளும், விதிமுறைகளும்  வெளியிடப்பட்டுள்ளது.

* கூகுள் படிவங்களூடாகவோ அல்லது ஊரும் உறவும் அலுவலகத்தின் ஊடாக விண்ணப்பிப்பவர்கள் மட்டுமே பங்குபெற முடியும்.

*குழு விளையாட்டுகளை பொறுத்தவரையில் விண்ணப்பங்களின்எண்ணிக்கைக்கேற்ப 4 தொடக்கம் 6 வரையிலான அணிகள் புள்ளிமுறையிலான ஏல அடிப்படையில் பிரிக்கப்படும்.

*குழு விளையாட்டுகளுக்கான அணி உரிமையாளர்களாக விருப்பம்உடையவர்கள் ஊரும் உறவும் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு தங்கள்விபரங்களை அறிவிக்குமாறும் ஊரும்உறவும் நிறுவன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article