நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் ஒரு தொகுதி வீதி விளக்குகள் கையளிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேசத்திற்கான வீதி விளக்குகள் பொருந்தும் செயற்திட்டத்தின் கீழ் நேற்றையதினம்  ( மே22 ) ஒரு தொகுதி வீதி விளக்குகள் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

திரு. திருமதி Dr. மருது கந்தப்பு அவர்களின் நினைவாக டெல்ப்ட் சமுத்திரா தனியார் நிறுவனத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது.

இவ் விளக்குகள் முன்னுரிமை அடிப்படையில் நெடுந்தீவு பிரதேச சபையினரின் மேற்பார்வையில் மின்சார சபையினரால் பொருத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வீதி விளக்குகள் பொருத்துதல் தொடர்பாக அண்மையில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்  தலைமையில்  இடம்பெற்ற நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உடன்பாடாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article