நெடுந்தீவு மாவிலி துறைமுக பகுதியில் பாவனையற்ற படகுகள் – அகற்ற நடவடிக்கை தேவை!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மாவிலி துறைமுக பகுதியில் பாவனையற்ற படகுகள்  பல தரித்து நிற்பதால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதுடன் துறைமுகத்தின் அழகுபொலிவிழப்பதாக பொதுமக்கள் தரப்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது  

தற்போது துறைமுகத்தில் பல படகுகள் பாவனைக்கு ஈடுபடுத்த முடியாத வகையில் கட்டிக்கிடப்பதுடன் பல படகுகள்  மீண்டும் பாவிக்க முடியாதநிலையிலும் துறைமுகத்தை அண்டியே நங்கூரமிடப்பட்டுள்ளதுடன் சிலபடகுகள் நீரில் மூழ்கி துறைமுகப் பகுதியில் ஏனைய படகுகள் சென்றுவருவதற்கு இடையூறாகவும் காணப்படுவதனால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையினை சீராக்கி துறைமுகம் வனப்புடன் இருக்க உரியவர்கள் ஆவன செய்யவேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article