நெடுந்தீவு பிரதேச சமுர்த்தி வங்கியின் புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டு – 2024

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேச சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் புத்தாண்டு  பாரம்பரியவிளையாட்டுப்போட்டிகள்  நேற்று முன்தினம் (  ஏப். 27) சமுர்த்தி வங்கிமுன்றலில் முகாமையாளர் திருமதி. கோ.பாமினி அவர்களின்  தலைமையில்  நடைபெற்றது.

இந் நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலாளர் (பதில்) திருமதி.நிவேதிகாகேதிசன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.

அத்நெதுடன் நெடுந்தீவு  சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு. இ.இரத்தினபாலன் மற்றும்மகாசங்க முகாமையாளர், வலயமுகாமையாளர் திருமதி.அ.மெர்சிபபிலா, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , நலன் விரும்பிகள், என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிறுவர்கள் மற்றும் பெரியோர்களுக்கான பாரம்பரிய, பொழுதுபோக்கு விளையாட்டுகள் இடம்பெற்றதுடன் வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article