நெடுந்தீவின் நிலையான அபிவிருத்திக்கான முக்கியமான கலந்துரையாடல்நாளை(ஏப்.29)!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவின் நிலையான அபிவிருத்திக்கான முக்கியமான கலந்துரையாடல்நாளை(ஏப்.29) மாலை 4.30 மணிக்கு நெடுந்தீவு மத்திய பகுதியில் அமைந்துள்ள ஊரும் உறவும் நிறுவன அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

நெடுந்தீவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அபிவிருத்திச்செயற்திட்டங்களிலும் எதிர்காலத்தில் நெடுந்தீவில்செயற்படுத்தப்படவிருக்கின்ற  அபிவிருத்திச் செயற்திட்டங்களிலும் நெடுந்தீவுஊரும் உறவும் நிறுவனமும் உள்ளூர் உறவுகளும் இணைந்து முழுமையானஒத்துழைப்பினை வழங்கி ஊரின் நிலையான அபிவிருத்தி செயற்திட்டங்கள்யாவும் விரைவுபடுத்தி பூர்த்தி செய்வதற்கு ஏதுவாகவும் இந்நிலையானஅபிவிருத்தி செயற்திட்டங்கள் உரிய ஒழுங்குமுறையில் நடைபெறுவதற்கு ஏற்றமக்களின் பங்களிப்புடன் வெளிப்படைத்தன்மையினை உறுதிப்படுத்தும்முகமாகவும் இக்கலந்துலையாடல் நடைபெறவுள்ளது.

நெடுந்தீவில் உள்ள 72 உள்ளூர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், ஊரின்உறவுகள் அனைவரும் இந்நிலையான அபிவிருத்திக்கான கலந்துரையாடலில்தவறாது கலந்துகொள்ளுமாறு ஊரும் உறவும் நிறுவனத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

நிலையான அபிவிருத்தி என்பது மக்கள் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவேண்டிய ஒன்றென்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article