நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ.த.க.வித்தியாலயத்தில் “நெடுவூர்த் திருவிழா” தொடர்பான கலந்துரையாடல் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

“மீண்டும் ஊருக்குப் போகலாம்” எனும் தொனிப்பொருளில் நெடுநதீவு ஊரும்உறவும்(DO-U) அமைப்பினால் உலகம் முழுவதும் பரந்து வாழும் நெடுந்தீவுஉறவுகளை ஒன்றிணைத்து  04.08.2024 தொடக்கம் 10.08.2024 வரைநடைபெற இருக்கும் “நெடுவூர்த் திருவிழா” தொடர்பான கலந்துரையாடல்நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ.த.க.வித்தியாலய மண்டபத்தில் கடந்த வாரம் இடம்பெற்றது.

நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தகலந்துரையாடலில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள்ஆகியோர்கலந்து கொண்டிருந்தனர். இதன்போது எதிர்வரும் ஆவணி மாதம்இடம்பெறவிருக்கும் நெடுவூர்த் திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாகவும் குறித்ததிருவிழாவை சிறப்பாக நடாத்தி முடிப்பது தொடர்பாகவும் இதில் பாடசாலையின்பங்களிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article