நெடுந்தீவிலுள்ள உள்ளூர் அமைப்புக்களுடன் “நெடுவூர் திருவிழா” தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

“நெடுவூர்த் திருவிழா“ எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெவுள்ளநிலையில் அது தொடர்பான ஏற்பாடுகளின் ஆரம்ப கலந்துரையாடல் நேற்றையதினம்(17 பெப்ரவரி) மாலை ஸ்ரார் விளையாட்டுக் கழக அங்கத்தவர்களுடன் நெடுந்தீவு கிழக்கு முருகன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.


கலந்து கொண்டிருந்த கழக உறுப்பினர்கள் நெடுவூர்த் திருவிழாவில் எவ்வாறான துறைசார் நிகழ்வுகளில் பங்களிப்பு செய்வது தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைத்ததுடன்


நெடுவூர்த்திருவிழாவிற்கு ஒத்துழைப்பினை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாகவும் இதன்போது தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் தலைவர், நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர், ஸ்ரார் விளையாட்டுக் கழக தலைவர் உட்பட நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Share this Article