வடதாரகை சேவையில் ஈடுபடவுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தற்போதைய கொரோனா சூழ்நிலையினால் நாடு பொது முடக்கத்திற்குள்ளாக்கப்பட்ட நிலையில் நெடுந்தீவு மக்களின் அவசர தேவைகளினைக் கருத்திற்கொண்டு நாளை (Aug – 26) வடதாரகைப் படகு சேவையில் ஈடுபடவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

காலை 07.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்டு மீண்டும் 08.00 மணிக்கு குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் இருந்து புறப்படும் தொடர்ச்சியாக மாலை நேரம் 03.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்டு மாலை 04.00 மணிக்கு குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு நோக்கி புறப்படும்.

அத்தியாவசிய தேவைகளினைக் கருத்திற் கொண்டே இப்போக்குவரத்து சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதுடன் தீவிலும் கொரோனா பாதுகாப்பு அதிகமாக காணப்படுவதால் மக்கள் விழிப்புணர்வுடன் பாதுகாப்பாக செயற்படுவது மிகவும் அவசியம்.

Share this Article