நாளைய தினம் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நாளைய தினம் (ஆகஷ்ட் 04) நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவுகளில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் 19 தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

நாளைய தினம் காலை 08.30 மணி முதல் மதியம் 01.00 மணிவரை தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இடம் பெறவுள்ளது.

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம் மற்றும் நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூர்p ஆகிய இரண்டு பாடசாலைகளும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

நெடுந்தீவில் பதிவினை மேற்கொண்டு நெடுந்தீவிற்கு வெளியில் வசித்து வருபவர்களும் நெடுந்தீவிற்கு வருகை தந்து கொவிட் 19 தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

 

Share this Article