நாளை முதல் வடதாரகைப் படகு சேவையில் ஈடுபடும்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கடந்த வாரம் நெடுந்தீவில் இருந்து வடதாரகைப் படகு மூலம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரயாணி ஒருவருக்க கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையினைத் தொடர்ந்து வடதாரகை சேவை தற்காலிகம நிறுத்தம் செய்யப்பட்டது.

வடதாரகையில் பணி புரியும் ஊழியர்கள் கடற்படை உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டமையினை அடுத்து நாளை முதல் சேவையில் ஈடுபடவுளளது

வழமைபோன்று வடதாரகைப் படகு நெடுந்தீவில் இருந்து 07.30 மணிக்கு புறப்பட்டு மீண்டும் 08.00 மணிக்கு குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் இருந்து புறப்படும் மாலை 03.30 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்டு மீண்டும் 05.00 மணிக்கு குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு நோக்கி புறப்படும்.

Share this Article