சீக்கிரியாம் பள்ளம் அ.த.க வித்தியாலத்திற்கு இன்று மணிவிழா

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யா.நெடுந்தீவு சீக்கிரியாம் பள்ளம் வித்தியாலயம் 1961ம் ஆண்டு ஆடி மாதம் 26ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது இன்றைய தினம் இவ்வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு 60வது ஆண்டு மணி விழா நாட்டு சூழ் நிலை காரணமாக இவ் விழாவினை சிறப்பாக நடாத்த முடியாத சூழ்நிலையால் பாடசாலை சமுகத்தினர் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

இன்றைய கொவிட் 19 சூழ்நிலையினைக் கருத்திற் கொண்டு இவ் வித்தியாலயத்தின் 60 ஆண்டு நிறைவு நிகழ்வினை புனித யாகப்பர் ஆலயத்தில் மிக சிறய அளவில் கொவிட் 19 பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இன்று மாலை ஏற்பாட்டு குழுவினர் சிறிய நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளனர்.

இவ் வித்தியாலயம் முதலில் யாகப்பர் ஆலயத்திலேயே ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனவே அவ் ஆலயத்தில் மாலை 05.00 மணிக்கு நன்றி செலுத்தும் ஆராதனையும் அதனை தொடர்ந்து 60வது ஆண்டு நினைவு தினத்தினை நினைவு கூறும் சில நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளது.

குறிப்பாக 60வது ஆண்டு நிகழ்வினையோட்டி பாடசாலை மற்றும் பழைய மாணவர்களுக்கிடையில் எழுத்தாக்க போட்டி நிகழ்வுகள் இடம் பெற்றனா பல மாணவர்கள் உற்சாகத்துடன் போட்டிகளில் பங்கு கொண்டிருந்தனர் அவர்களுக்கான பரிசளிப்பும் இன்றைய தினம் இடம் பெறவுள்ளது.

Share this Article