செஞ்சிலுவைச் சங்கத்தால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளையினால் தற்போதைய கொவிட் நிலைமையினைக் கருத்திற் கொண்டு வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

நேற்யை தினம் நெடுந்தீவு செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவலகத்தில் வைத்து 20 பயனாளிகளுக்கு தலா ஒரு பயனாளிக்க ரூபாய் 2500.00 பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன மேலும் இன்றைய தினம் 02 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதுடன் இன்னும் 08 பயனாளிகளுக்க வழங்கப்படவுள்ளது.


மொத்தம் தேர்வு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு பிரித்தானியாவில் இயங்கும் கனகம்மா பவுண்டேசன் நிறுவத்தின் நிதியுதவியுடன் செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவு கிளையின் ஊடாக இவ் உதவித்திட்டம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புரவிப்புயல் பாதிப்பு, கொவிட் 19 பாதிப்பு போன்ற நிலைகளில் நெடுந்தீவில் பல்வேறு செயற்பாடுகளை செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article