சௌபாக்கியா வீடு திறந்து வைக்கப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சமுர்த்தி சௌபாக்கியா வாரத்தினை முன்னிட்டு இன்றைய தினம் நெடுந்தீவு பிரதேச செயலத்திற்குட்பட்ட ஜேஃ01 நெடுந்தீவு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைக்கப்பட்ட சௌபாக்கியா வீடு இன்றைய தினம் (ஜீலை 06) பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.எவ்.சி சத்தியசோதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டு உரியவரிடம் கையளிக்கப்பட்டது.

சமுர்ததி முகாமையாளர் திருமதி கோ.பாமினி அவர்களது தலமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலாளர், பிரதேச சபை தலைவர், பொதுஜன பெரமுன கட்சியின் தீவக இணைப்பாளர் மற்றும் கட்சியின் நெடுந்தீவு இணைப்பாளர் வங்கி முகாமையாளர், சமுhத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம அலுவலர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

Share this Article