குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு 06ம் வட்டாரத்தினை சேர்ந்த டேவிற் கனிஸ்வரதாஸ் (வயது 42) 03 பிள்ளைகளின் தந்தை இன்றைய தினம் (ஜீலை 01) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குடும்ப சூழலினால் மனைவியினை பிரிந்து வாழ்ந்த இவர் மன விரக்தியில் இவ்வாறான தவறான முடிவினை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது.

தாமளப்பூ குளத்திற்கு அன்மித்த ஆட்களற்ற பகுதிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலையில் அவ்வழியாக சென்றவர் கண்ணுற்று தகவல் வழங்கியதன் பிரகாரம் பொலிசார் சம்ப இடத்திற்கு சென்று சடலத்தினைப் பெற்றுக்கொண்டனர்.

மரண விசாரணை அதிகாரி நெடுந்தீவிற்கு சென்று நிலமையினை பார்வியிட்டதுடன், தற்போது மேலதிக விசாரணை மற்றும் பீ.சீ.ஆர் , உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Share this Article