
நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் இன்றையதினம் ( மே 31) சிரமதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிரமதானப் பணியினை நெடுந்தீவு பிரதேச வசபா கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் இன்று காலை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மக்கள் நலன் சார்ந்த பணிகளில் தம்மை இணைத்து செயற்படும் வகையில் இலங்கை கடற்படையினர் இந் நல்லெண்ண திட்டத்தினை செயற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

