5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலையில்!- அரச மருத்துவஅதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

அரசாங்கத்தின் அலட்சியம் காரணமாக இதுவரை 100 க்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் 5000 வைத்தியர்கள் எதிர்வரும் காலங்களில் நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாகவும் அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராக கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் அரச மருத்துவஅதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் ஜனவரி 1 ஆம் திகதி முதல் கடுமையான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுவில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, நாடு விசேட வைத்தியர்கள் உட்பட 1,700 க்கும் மேற்பட்ட வைத்தியர்களை இழந்துள்ளதுடன், 5,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் விரைவில் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியர் பற்றாக்குறை காரணமாக 20 சிறிய வைத்தியசாலைகள் முற்றாக மூடப்பட்டுள்ளதுடன் 400 இற்கும் மேற்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் விசேட வைத்திய பிரிவுகள் முடங்கும் அபாயம் காணப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளது.

Share this Article