40 வருடங்களை கடந்தும் மனதைவிட்டகலா குமுதினி படுகொலைநினைவேந்தல் நாள் இன்று!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்திவிற்க்கும் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கும் இடையில் குமுதினிப்படகில் பயணம் செய்த போது ஈவிரக்கமின்றி 36 பொதுமக்கள் படுகொலைசெய்யப்பட்ட துயரம் படிந்த  40 ஆவது நினைவு நாள் இன்று.

1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் காலை ஏழு மணிக்கு நெடுந்தீவுமாவிலி துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் குமுதினி படகு தனதுபயணத்தை வழமைபோல ஆரம்பித்தது.

குமுதினிப்படகு அரை மணி நேரம் தனது பயணத்தைமேற்கொண்டிருந்தவேளை நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு இந்த கோர கொலைசம்பவம் அரங்கேற்றப்பட்ட துயரம் நிறைந்த நாள் இன்று.

இந் நினைவு நாளை நெடுந்தீவிலும் புலம்பெயர் நாடுகளிலும் இன்றுஉணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article