புதுமுறிப்பு குளத்தின் அணைக்கட்டை சீர் செய்ய களத்தில் இறங்கிய இராணுவத்தினர்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தின் அணைக்கட்டில் ஏற்பட்ட பாதிப்பினை சீர் செய்யும் நடவடிக்கையில் பொதுமங்களுடன் சேர்ந்து இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

புதுமுறிப்பு குளத்தின் அணைக்கட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், நீர்பாசன பொறியியலாளர்களால் ஆராயப்பட்ட போது மண்ணரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று(டிசம்பர் 16) காலை நீர்பாசன திணைக்கள பொறியியலாளர்களின் கண்காணிப்பில் இராணுவத்தினரின் உதவியுடன் பொது மக்களும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை இராணுவத்தின் 11 வது கஜபா படை பிரிவினர் 40 பேர் வரை குறித்த பணியில் ஈடுபட்டுள்ளதுடன், குளக்கட்டின் ஊடான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share this Article