35வது பொதுப்பட்டமளிப்பு விழா

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாண பல்கழைக்கழகத்தின் 35வது பொதுப் பட்டமளிப்பு விழா நாளைய தினம் (ஓக்டோபர் 07) இடம் பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய கால சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு சூம் தொழிநுட்பத்தின் ஊடாகவே இப்பட்டமளிப்பு விழா இடம் பெறவுள்ளது.

நாளை நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் நெடுந்தீவு 13ம் வட்டாரத்தினை சேர்ந்த செல்வி பவிஸ்கா யோசேப் அமிர்தம் அவர்கள் சிறப்பு கலைமானி பட்டம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட மாணவி 2016ம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரிட்சையில் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து பரிட்சைக்கு தோற்றி தனியொரு மாணவியாக பல்கழைக்கழகத்திற்கு தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

நாளை நடைபெறும் இப் பொது பட்டமளிப்பு விழாவில் நெடுந்தீவினை பிரதிநிதித்துவப் படுத்தும் தனியொரு மாணவியாக இணைந்து கொள்வதும் குறிப்பிடத்தக்கது.

Share this Article