31ம் நாளினை நினைவுகூரும் விதமாக இராப்பொழுது உணவு வழங்கி வைப்பு.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
33 குடும்பங்களுக்கு இராப்பொழுது உணவு வழங்கி வைப்பு.
நெடுந்தீவின் சிறந்த படகோட்டியாக மக்களால் போற்றப்பட்ட அமரர்.இ.அருள்நாயகம் அவர்களின் மறைவின் 31ம் நாளினை நினைவுகூரும் விதமாக அவர்களின் புதல்விகள் வழங்கிய நிதிப்பங்களிப்பு உதவியின் மூலம்
உடுவில் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ.சந்திரவதனி காந்தராசா அவர்களின் விசேட கோரிக்கைக்கு அமைவாக பயணத்தடை காரணமாக நாளாந்த வருமானம் பாதிப்படைந்து தினக்கூலியை வாழ்க்கை முறையாக கொண்ட வயலும் வயல்சார்ந்த வாழ்வாதாரங்களைக்கொண்ட J/194 கிராமசேவையாளர் பிரிவை உடைய மருதனார்மடம் VC Lane பகுதியில் வசிக்கும் 33குடும்பங்களுக்கு இன்று (06.06.2021) இராப்பொழுது உணவு வழங்கி வைக்கப்பட்டது.
அமரர். இ.அருள்நாயகம் அவர்களின் ஆன்மா ஈடேற்றம் பெற இறைவனை பிராத்தித்து நிற்பதுடன் இடர்காலத்தில் தேவையுடைய மக்களின் பசியை போக்கிட உதவியை வழங்கிய உறவுகளுக்கு  யாழ்ப்பாணம் கே.கே.பி இளைஞர் கழகத்தினரும் மக்களும் நன்றியை தெரிவித்துள்ளனர்.
மேலும் இத்தகைய தேவையுடைய மக்கள் அதிகளவில் எமது சமூகத்தில் வாழ்ந்து வருகின்றார்கள் அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை வழங்கி அவர்களின் பசியை போக்கிட உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share this Article