3 மாதங்களில் நீக்கப்படவுள்ள எரிபொருள் கியூஆர் முறைமை!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எரிபொருள் விநியோகத்துக்காக தற்போது நடைமுறையில் உள்ள கியூஆர் முறைமை எதிர்வரும் 3 மாதங்களின் பின்னர் நீக்கப்படும் என்று மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்தபோதே மின்சக்தி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பான யோசனை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

அதேவேளை, தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் விநியோகத்துக்கான கியூஆர் முறைமையை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் 3 மாதங்களின் பின்னர் கியூஆர் முறைமை நீக்கப்படும் என்றார்.

Share this Article