ஊர்காவற்றுறையில் மாணவர்களை ஊக்குவிக்க போட்டிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

ஊர்காவற்றுறை புனித யோசவ்வாஸ் இளையோர் ஒன்றியம் ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் (ஜூலை 23) மறைப் பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக போட்டிகள் நடாத்தப்பட்டன.

குறித்த போட்டிகளானது
பிரிவு 01 புனிதர்களின் வேடம் ஏற்றல்
{தரம் 1,2,3,4,5}
பிரிவு 02
வினாவிடை பரீட்சை {தரம் 6,7,8}

பிரிவு 03
கட்டுரை போட்டி
{தரம் 9,10,11}
என மூன்று பிரிவுகளாக புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்றனர்.

பிரிவு ஒன்று மாணவர்களுக்கான புனிதர்களின் வேடம் ஏற்றல் போட்டிக்கு நடுவர்களாக மறையுரைஞர் பெனற் சிங்கர் அடிகளாரும் அருட்சகோதரி அனுசியா அவர்களும் கலந்து கொண்டனர்.

போட்டிகள் அனைத்தையும் பங்குத்தந்தையின் அனுமதியுடன் புனித யோசவ்வாஸ் இளையோர் ஒன்றியத்தினர் சிறப்பாக நடத்தினர்.

Share this Article