21,000 கடலட்டைகளுடன் 12 பேர் ஊர்காவற்றுறையில் கைது!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சாட்டிக கடற்கரையில் 21 ஆயிரத்து 175 கலட்டைகளுடன் 12 சந்தேகநபர்களை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை சட்டவிரோதமான முறையில் கடலட்டை எடுத்து செல்ல இருப்பதாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய அல்லைப்பிட்டி, சாட்டி கடற்கரையில் சோதனை நடவடிக்கை முன்னெடுத்த பொலிஸார் 9 ஆயிரத்து 875 கடலட்டைகளுடன் 11 பேரைக் கைது செய்தனர்.

மறுநாளும் அந்தப்ப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் 11 ஆயிரத்து 300 கடலட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, அவர்களை 50 ஆயிரம் ரூபா ஆள்பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது.

Share this Article