யாழ்ப்பாணம் பருத்தித்துறை சிவன் கோவிலுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நிலையில் கைது செய்யப்பட்ட 23 வயதான இளைஞனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கைதானவர் ஒரு சைக்கிள் திருடன் என தொியவந்துள்ளது.
இதனையடுத்து திருடப்பட்ட 21 சைக்கிள்களை பருத்தித்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன் தினம் இடம்பெற்ற நிலையில், மீட்க்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் துவிச்சக்கர வண்டி திருடப்பட்டிருந்தால் உரியவர்கள் அதனை அடையாளம் காட்ட முடியும் என பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மேலும் கைதான சந்தேக நபர் இன்று பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.