யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக திருமதி விவியன் சத்தியசீலன் நியமிக்கப்பட்டுள்ளார்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக சித்த மருத்துவக் கலாநிதி திருமதி விவியன் சத்தியசீலன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 18) நடைபெற்ற சித்த மருத்துவ பீட சபை கூட்டத்தில் பீடாதிபதி தேர்தல் நடைப்பெற்றது. இதில், கலாநிதி திருமதி விவியன் சத்தியசீலன் 6 மேலதிக வாக்குகளுடன் பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இதுவரை சித்த மருத்துவ கற்கை அலகாக செயல்பட்டு வந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பிரிவு, கடந்த ஜூலை 26ஆம் திகதி பீடமாக தரம் உயர்த்தப்பட்டது.

இப்பீடத்தில் நஞ்சியல் மற்றும் பரம்பரை மருத்துவம், மனித உயிரியல், சமூகநல மருத்துவம், சிரோரோகமும் அறுவை மருத்துவமும், நோய் நாடல் சிகிச்சை, குணபாடம் மற்றும் மூலதத்துவம் போன்ற பாடத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சித்த மருத்துவ அலகு பீடமாக தரம் உயர்த்தப்பட்ட நாளிலிருந்து, முன்னாள் துறைத் தலைவர் மற்றும் சிரேஸ்ட விரிவுரையாளரான கலாநிதி திருமதி விவியன் சத்தியசீலன் பதில் பீடாதிபதியாக செயல்பட்டு வந்ததை குறிப்பிட வேண்டும்.

Share this Article