நெடுந்தீவுக் கடலில் இந்திய படகு கரையொதிங்கியுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவுக் கடற்கரையில் இந்திய இழுவைப் படகு கரையொதிங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

படகில் பயணித்தவா்கள் இந்தியாவிற்கு திரும்பியுள்ளதாக அறிய முடிகின்றது.

இந்திய இழுவைப்படகு நெடுந்தீவுக் கரையில் கரையொதிங்கியதை அடுத்து கடற்படையினாின் உதவியுடன் படகினை சோதனையிட்ட போது படகில் யாருமில்லாத நிலை காணப்பட்டதுடன், இயந்திரம் இயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது.

குறித்த படகு கோட்டைப் பட்டிணத்த்தினை சோ்ந்த ரமேஷ் மாாியாசாாி என்பவருக்கு உாித்தான படகு எனவும் நெடுந்தீவுக்கு அண்மையில் தொழிலில் ஈடுப்ட்ட போது இரவு 10.00 மணியளவில் படகு பழுதடைந்துள்ள போது,  குறிப்பிட்ட படகில் பயணித்த நான்கு தொழிலாளா்களும் பிறிதொரு படகில் தமிழகம் திரும்பியுள்ளதாக அறிய முடிகின்றது.

 

Share this Article