2026 ஆம் ஆண்டுக்கான முக்கிய பரீட்சை அட்டவணை வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கல்வி அமைச்சு 2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சை அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2025 (2026) கல்வி பொது தராதர (சாதாரண தர) பரீட்சை 2026 பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 26 வரைநடைபெறும்.

மேலும், கல்வி பொது தராதர (உயர்தர) பரீட்சை 2026 ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 05 வரை நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2026 ஆகஸ்ட் 09 ஆம் திகதி நடைபெற உள்ளது.

இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர (சாதாரண தர) பரீட்சை 2026 டிசம்பர் 08 முதல் டிசம்பர் 17 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Share this Article