நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் இருந்து 2024 தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட சகல மாணவர்களுக்கும் “நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் – கனடா ” ஒருதொகை பணம் வங்கியில் வைப்பிட்பிட்டு அதற்கான புத்தகம் கையளிக்கப்படவுள்ளது.
எனவே 100 புள்ளகளுக்கு மேல் பெற்றுக்கொண்டோர் நாளையதினம் (மார்ச்04) நெடுந்தீவு பல. நோ. கூ. சங்க வளாகத்தில் அமைந்துள்ள கூட்டுறவு கிராமிய வங்கியில் கணக்கினை திறக்கும் வகையில் பிறப்புச்சான்றிதழ் மற்றும் பெற்றோருடன் வருகை தருமாறு ஒன்றியத்தின் நெடுந்தீவு நிர்வாகக் கிளைத்தலைவர் எ.அருந்தவசீலன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை (மார்ச்04) காலை 8.30 மணிமுதல் மாலை 4.00 மணிக்குள் குறிப்பிட்ட மாணவர்கள் தவறாது சமூகமளித்து கணக்கினை திறந்துகொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.