2வது தடவையாக வீட்டுத்தோட்ட போட்டி நடாத்தப்படவுள்ளது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவில் வாழும் மக்கள் மத்தியில் வீட்டுததோட்ட செயற்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக கடந்த வருடம் நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினரால் வீட்டுத்தோட்ட செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

சிறிய பொருளாதார மாற்றத்தினை ஏற்படுத்வதுடன் உணவுப் பாதுகாப்பு முறையினையயும் ஏற்படுத்த வல்ல இவ்வீட்டுத்தோட்ட செயற்பாட்டினை நடைமுறைப்படுத்துவது வரவேற்கத்தக்க விடயம்

கடந்த வருடம் மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினரால் ஆரம்பிக்கப்பட்ட இச் செயற்பாட்டில் மக்கள் ஆர்வத்துடன் பங்கு பற்றினார்கள் அதனை மேலும் ஊக்குவிக்க இச் செயற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது.

பங்கு பற்றுபவர்களது வீட்டுத்தோட்ட துறைசார்ந்தவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு முதலாவது பரிசாக ரூபாய் 25,000.00 இரண்டாவது பரிசாக ரூபாய் 15,000.00 மூன்றாவது பரிசாக ரூபாய் 10,000.00 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இப்போட்டியில் பங்கு கொள்ள விரும்புவர்கள் நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் விண்ணப்பங்களைப் பெற்று அதனைப் பூர்;த்தி செய்து கையளிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள் முதல் சமாப்பிக்கப்படும் 50 போட்டியாளர்களே தேர்வு உள்வாங்கப்படவுள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடன் இணைந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்

Share this Article