19 நாள்களேயான பெண் குழந்தை அல்லைப்பிட்டியில் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தாய்ப்பால் குடித்து விட்டு உறங்கிய பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் அல்லைப்பிட்டியில் நடந்துள்ளது.

அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த சுலக்சன் ரேணுகா எனும் 19 நாள்களேயான பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.

குழந்தையின் தாயார் காலை குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க வைத்த பின்னர் நீண்ட நேரமாக குழந்தை உறக்கத்திலேயே இருந்துள்ளது. குழந்தையை தாயார் சென்று பார்த்தவேளை குழந்தை அசைவின்றி காணப்பட்டுள்ளது.

அதையடுத்து குழந்தையை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டது என்று மருத்துவர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

Share this Article