காரைநகர் பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தினம்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தினம் நேற்று (மார்ச் 17) உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மத்திய வங்கி முகாமையாளர், கொமர்ஷல் வங்கி முகாமையாளர் (கொடிகாமம் கிளை), வல்லமை சமூக மாற்றத்துக்கான இயக்குநர் றஜனி ராஜேஸ்வரி மற்றும் ப்ரண்ஸ் நிறுவன நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர், டேகாலக்ஷ்மி ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

முதல் நிகழ்வாக நினைவு மரநடுகை இடம்பெற்றதுடன் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் வீதி நாடகம் என்பனவும் நடைபெற்றது. பெண் தொழில் முயற்சியாளர்களின் விற்பனைச்சந்தையும் நடைபெற்றது.

Share this Article