15ஆம் திகதி முடங்கவுள்ள பாடசாலைகள் – வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

எதிர்வரும் 15ஆம் திகதி புதன்கிழமை ஆசிரியர்கள் – அதிபர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர் – அதிபர் சங்க சம்மேளனம் தெரிவித்தது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள், அறநெறி ஆசிரியர்கள், ஆசிரிய உதவியாளர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அன்றைய தினம் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

மக்களைத் துன்பத்துக்கு உள்ளாக்கும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் நீர் வழங்கல், மின்சார விநியோகம், மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கள் கலந்துகொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article