13 வயதுச் சிறுமியை வேலைக்கமர்த்திய பெற்றோரைக் கைதுசெய்க!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளிநொச்சி, திருமுறிகண்டியைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமியை வேலை செய்யப் பணித்த குற்றச்சாட்டில் பெற்றோரைக் கைது செய்யுமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

திருமுறிகண்டியைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி தினமும் அங்கிருந்து பி.ப. 1.30 மணியளவில் பேருந்தில் ஏறி யாழ்ப்பாண நகருக்கு வருவார். யாழ். நகரில் உணவுப் பொருள்களை விற்பனை செய்துவிட்டு இரவு 8 மணியளவில் பேருந்தில் மீண்டும் கிளிநொச்சிக்குச் செல்வார்.

இந்த நிலையில் இவர் விற்பனை செய்யும் உணவுப் பொருள்கள் காலாவதியாக இருந்ததுடன், தனியாக இவர் வியாபார நடவடிக்கையில் ஈடுபட் டமை கண்டறியப்பட்டு யாழ்ப்பாணப் காவல்துறையினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்ட நிலையில் பெற்றோரைக் கைது செய்யுமாறு நீதிவான் பணித்துள்ளார்.

Share this Article