12 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை – தீவகத்தில் ஆசிரியர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தீவகத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் 42 வயதான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தரம் 7 இல் கல்வி கற்கும் 12 வயதான மாணவிக்கே ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மாணவி தன் தாயாரிடம் முறையிட்டுள்ளார். பாடசாலை அதிபரிடம் முறையிடப்பட்டபோது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிடப்பட்டது.

ஆசிரியர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

கைதான ஆசிரியர் ஏற்கனவே வலிகாமம் பகுதி பாடசாலையொன்றில் கல்வி கற்பிக்கும்பொழுது சில மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

மாணவிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முன்வரததால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, அவர் மீளவும் ஆசிரியர் சேவையில் இணைக்கப்பட்டிருந்தார்.

Share this Article