1,150 அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் இன்றிய ஐந்தாண்டு விடுமுறை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அரசாங்க ஊழியர்களில் ஆயிரத்து 150 பேருக்கு சம்பளம் இன்றிய ஐந்தாண்டு விடுமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளமின்றி ஐந்தாண்டு விடுமுறை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை அடுத்து இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வேலைத் திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன என்றும், அவற்றில் ஆயிரத்து 150 விண்ணப்பங்களே அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article