10 வயது மாணவி 8 தடவைகள் வன்புணர்வு – வெளியான அதிர்ச்சித் தகவல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கொழும்பில் உள்ள பிரபல மகளிர் பாடசாலையில் கல்வி கற்கும் 10 வயது மாணவி 8 தடவைகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸார் நேற்று(ஜூன் 22) நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

பாதிப்புக்குள்ளான சிறுமி இந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளார். சிறுமியை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சேர்த்து சிகிச்சை அளிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் நடத்தையில் கடந்த சில நாளடகளாக மாற்றம் ஏற்பட்டுள்ளதை கவனித்த வகுப்பு ஆசிரியர் சிறுமியை வெல்லம்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையிள்படி, சிறுமி 8 முறை வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

சிறுமியின் உடலின் சில பாகங்கள் சிகரெட்டினால் சுடப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றது என்றும் தடயவியல் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பின் பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனின் பெயர் உள்வாங்கப்பட்டுள்ளது என்றும், அந்த பாடசாலை மாணவர்கள் அனைவரையும் அழைத்த போது சந்தேகநபரை அடையாளம் காட்ட சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

Share this Article