10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

சதொச விற்பனை நிலையத்தினால் 10 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இன்று (டிசம்பர் 15) முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பால் மா 10 ரூபாவாலும், இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன் (425 கிராம்) 55 ரூபாவாலும், 155 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட டின்மீன் 10 ரூபாவினாலும், 425 கிராம் உள்நாட்டு டின்மீன் 20 ரூபாவினாலும்,  உள்ளூர் உருளைக்கிழங்கு 15 ரூபாவினாலும், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 15 ரூபாவினாலும், கொண்டைக்கடலை 5 ரூபாவினாலும் விலை ஒரு கிலோ சிவப்பு அரிசி 8 ரூபாவினாலும், வெள்ளை நாடு (உள்ளூர்) 7 ரூபாவினாலும் குறைக்கப்பட்ட பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முட்டை 35 ரூபாவிற்கும், ஒரு கிலோ சீனி 275 ரூபாவிற்கும், ஒரு கிலோ வெங்காயம் 400 ரூபாவிற்கும்  விற்பனை செய்யப்படும் எனவும் சதொச தெரிவித்துள்ளது.

Share this Article