வைத்தியா் க.பாலச்சந்திரன் அவா்கள் இயற்கை எய்தினா்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றிய வைத்தியா் க.பாலச்சந்திரன் இன்று (டிசம்பா் 25) வைத்தியசாலையில் இயற்கை எய்தினாா்.

தீவகம் நயினாதீவினை சோ்ந்த வைத்தியா் க.பாலச்சந்திரன் அவா்கள்  நெடுந்தீவில் வைத்தியா்கள் இல்லாத நிலைமையில் தனது சேவை அதிகாிப்பினைப் பெற்று பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் நெடுந்தீவில் பணி புாிந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவி, பிள்ளைகள், வெளிநாடுகளில் வாழ்கின்ற போதும் தனியாக தீவகங்களில் தனது பணியினை மேற்கொண்ட வைத்தியா் சேவையினை நெடுந்தீவு உட்பட தீவகங்களில் வாழ்பவா்கள் மறந்து விடமாட்டாா்கள்.

நெடுந்தீவு வைத்தியசாலையில் பல வருடங்கள் பணியாற்றி நெடுந்தீவில் வைத்தியா் இல்லாமை என்கின்ற பாாிய குறையினை நிவா்த்தி செய்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.இன்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் நோய்த்தாக்கம் காரணமாக இயற்கை எய்தினாா்

Share this Article