வேலணை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு காலணி வவுச்சர்கள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தேசிய ரீதியாக நடைபெற்ற நிகழ்வின் வடமாகாணத்துக்கான நிகழ்வான ” பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர்கள் வழங்குதல் -2024″ நிகழ்வு வேலணை மத்திய கல்லூரியில் நேற்றுமுன்தினம் (டிசம்பர் 4) இடம்பெற்றது.

வட மாகாணக்கல்விப்பணிப்பாளர் தி.ஜோண் குயின்ரஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த நிகழ்வின் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் கலந்துகொண்டார்.

தீவகவலய கல்விப்பணிப்பாளர் தி.ஞானசுந்தரன், வடமராட்சி வலயக் கல்விப்பணிப்பாளர் க.சத்தியபாலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

வடக்கு மாகாண ஆளுநர் P.S.M சார்ள்ஸ் அவர்கள் ZOOM தொழில்நுட்பத்தினூடாக வழங்கிய வாழ்த்துச் செய்தியுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு , கலைநிகழ்வுகளுடன் நிகழ்வு சிறப்புற, மாணவர்களுக்கு காலணிக்கான வவுச்சரும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மாகாணக் கல்வித் திணைக்கள பிரதி, உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், தீவகவலய பிரதி, உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், தீவக கல்வி வலய அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் , ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், என பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article