வெளியாகிய உயர்தரப் பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள் நேற்று (நவம்பர் 24) வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீள் திருத்த பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகியவற்றில் பார்வையிடலாம்.

மீள் திருத்தம் செய்வதற்காக 60,336 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற நிலையிலேயே தற்போது பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Share this Article