வெடுக்குநாரிமலையில் சிவலிங்கத்தை உடைத்தெறிந்த விசமிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வவுனியா வடக்கு பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாரிமலை சிவன் ஆலயத்தின் அத்தனை விக்கிரகங்களும் அகற்றப்பட்டுள்ளமை ஆலய நிர்வாகிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆதிசிவன் ஆலயத்தில் சிவன், அம்மன், பிள்ளையார், பாலமுருகன் மற்றும் வைரவர் விக்கிரகங்கள் மக்களால் வழிபடப்பட்டு வந்தன. இந்தநிலையில், அந்தப் பகுதிக்கு எவரும் செல்ல முடியாதவாறு 2019ஆம் ஆண்டு தொல்லியல் திணைக்களம் தடை ஏற்படுத்தியது.

இது தொடர்பில் வவுனியா நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வரும் நிலையில் ஆலயத்தின் விக்கிரகங்கள் அனைத்தும் அரச திணைக்களம் ஒன்றால் திருட்டுத் தனமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்று கிடைத்த தகவலின் பேரில் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர் இன்று(மார்ச் 26) அந்தப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.

ஆலயம் மற்றும் சூழலில் இருந்த மத அடையாளங்கள் அனைத்தும் திட்டமிட்ட முறையில் அகற்றப்பட்டுள்ளமையை ஆலய நிர்வாகிகள் உறுதி செய்தனர்.

அந்தப் பகுதிக்குச் செல்ல அனுமதி மறுத்த தொல்லியல் திணைக்களம் ஆலய சொரூபங்களையும் அபகரித்துச் செல்வதற்கும் உடந்தையாக செயல்பட்டுள்ளதா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

Share this Article