விஷேட ஆங்கில வகுப்புக்கள் அகஷ்ட் 21இல் ஆரம்பம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
பாடசாலை கல்வியை நிறைசெய்தவர்கள் மற்றும் தொழில் புரிவோருக்கான ஆங்கில வகுப்புக்கள் நண்பர்கள் வட்டத்தின் கல்விக் குழுவினால் எதிர்வரும் 21ம் திகதி வெள்ளிக் கிழமை மாலை 5.30 மணிக்குஆரம்பிக்கப்படவுள்ளது.
ஏற்கனவே பதிவினை மேற்கொண்டவர்களும் புதிதாக இணைந்து கொள்ளவிரும்புவர்களும் இவ்வகுப்பில் இணைந்து கொள்ளமுடியும்
தினம் தோறும் திங்கட்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரைக்கும் மாலை 5.30 மணி முதல் மாலை 06.30 மணி வரைக்கும் இவ் வகுப்புக்கள் செந்தமிழ் கல்விநிலையத்தில் நடாத்துவதற்கானஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக செந்தமிழ் கல்வி நிலையமும் நண்பர்கள் வட்டத்தின் கல்விச் செயற்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன
இவ்வகுப்புக்கள் 06 மாதகாலம் கொண்டதாக இடம் பெறுவதுடன், இறுதியில் சான்றிதல்களும் வழங்கப்படும்

தற்போது கடந்த வருடம் க.பொ.தசாதரணதரப்பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான ஆங்கிலவ குப்புக்கள் நண்பர்கள் வட்டத்தின் தலமையலுவலகத்தில் நடைபெற்றுவருவதுகுறிப்பிடத்தக்கது.

Share this Article