விவசாயசங்கங்களுக்கு நிலக்கடலை நாட்டும் இயந்திரம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட முத்துவிநாயகர்புரம் நிலக்கடலையாளர் உற்பத்தி சங்கம், முத்தயன்கட்டு நிலக்கடலை உற்பத்தியாளர் சங்கம் இரண்டிற்கும் நிலக்கடலை நாட்டும் இயந்திரம் (ManualDrum Seeder ) வழங்கி வைக்கப்பட்டது.

தெரிவு செய்யப்பட்ட பயனாளர் 20 பேருக்கு கடந்த 19 ஆம் திகதி கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவருமான காதர் மஸ்தான் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

வன்னி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தினால் ( ILO) குறித்த இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. எஸ்.குணபாலன்(காணி ), பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி ஜாமினி, ஏனைய உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article