விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ நியமனம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த ரொஷான் ரணசிங்க அவர் வகித்த அனைத்து அமைச்சு பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்ட நிலையில், குறித்த அமைச்சுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சியும் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சற்று முன்னர் இவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இன்று பதவி நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article