விடுதலை கிடைத்தும் சிறகடிக்க முடியாத சாந்தன் – தாயின் உருக்கமான கோரிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட சாந்தன் நாடு திரும்ப உதவ வேண்டும் என்று இலங்கையில் உள்ள அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

32 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த சாந்தன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டபோதும் அவர் தற்போது முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருடன் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். ஆவணங்களில் உள்ள சிக்கலால் இன்னமும் நாடு திரும்ப முடியவில்லை.

சில நாள்களுக்கு முன்னர் அவர் தான் நாடு திரும்ப உதவ வேண்டும் என்று கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தநிலையில் இலங்கையில் உள்ள அவரது தாயாரும் தனது மகன் நாடு திரும்ப உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Share this Article