விசேட சுற்றிவளைப்பில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 5 இலட்சத்து 70 ஆயிரம் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர்கள் இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (நவம்பர் 9) மாலை கற்பிட்டி, இரமதீவு பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

குறித்த தீவுப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றினை பரிசோதனைக்கு உட்படுத்திய போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 பெட்டிகளில் குறித்த போதை மாத்திரைகள் காண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது கற்பிட்டி, நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 39 வயதுடைய இரு சந்தேகதர்களை கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக புத்தளம் மாவட்ட போதை ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Share this Article