வான் சாகசம் – 2024′

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு ‘வான் சாகசம் – 2024’ கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம், முற்றவெளி மைதானத்தில் இன்று  சனிக்கிழமை (09 மார்ச்) நான்காவது நாளாகவும் இடம்பெற்றுவருகிறது.

“நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கடந்த 06 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகிய கண்காட்சி நாளை (10)  ஞாயிற்றுக்கிழமை வரை காலை 10 மணி முதல் இரவு 11 மணிரை இடம்பெறவுள்ளது.

இன்றைய நிகழ்வில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஒருவன் கொழும்பில் நடைபெறவுள்ள விமான துறைசார் நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு கோரினார். இதன்போது விபரங்களை தருமாறும் பரிசீலிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். மேலும் மாணவனுக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

Share this Article